சான் ஃப்ரான்சிஸ்கோ: ட்விட்டரின் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் அதனை கையகப்படுத்தியதில் இருந்து பல்வேறு அதிர வைக்கும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அந்த வரிசையில் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை லாப பாதைக்கு மீட்டெடுக்க ஊழியர்கள் அதிக நேரம் பணி செய்ய வேண்டியிருக்கும். இதற்கு இசைவு தெரிவிப்பவர்கள் வியாழன் மாலைக்குள் ஒப்புதல் இமெயிலை அனுப்பலாம் விருப்பமில்லாதவர்கள் விலகிக் கொள்ளலாம் என்று கெடு விதித்திருந்தார்.
இது ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ட்விட்டர் ஊழியர்கள் பலரும் இந்தக் கெடுவை ஏற்றுக் கொள்ள விருப்பமில்லாமல் ராஜினாமாக் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். நிறைய ஊழியர்கள் சல்யூட் இமோஜிக்களையும், பிரியாவிடை குறுந்தகவல்களையும் ட்விட்டர் நிறுவனத்தின் இன்டர்நல் சேட் பாக்ஸில் அனுப்பிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் ஊழியர்கள் கொத்து கொத்தாக ராஜினாமாக்களை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில ஊழியர்கள் ஊடகங்கள் தங்களது ராஜினாமாவை உறுதி செய்தாலும் கூட பெயர் தெரிவிக்க விரும்பவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XxugV4i
No comments:
Post a Comment