மாட்ரிட்: சால்டோ டி காஸ்ட்ரோ. ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு கிராமம். தலைநகர் மாட்ரிட்டிலிருந்து மூன்று மணி நேர பயணத்தில் இந்தக் கிராமத்தை அடைந்துவிடலாம். 44 வீடுகள், ஒரு விடுதி, ஒரு தேவாலயம், ஒரு பள்ளி, ஒரு நீச்சல் குளம் உள்ள இந்தக் கிராமம் தற்போது விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
இந்தக் கிராமம் உருவான கதை சுவாரஸ்யமானது. 1950-களில் மின் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இக்கிராமத்தின் அருகே அணை கட்டும் பணியில் ஈடுபட்டது. ஊழியர்கள் தங்கி பணிபுரிவதற்காக அந்நிறுவனம் இங்கு வீடுகளைக் கட்டியது. அவர்களின் தேவைக்காக பள்ளி, தேவாலயம், நீச்சல் குளம் உள்ளிட்டவை கட்டப்பட்டன. அந்நிறுவனத்தின் பணி 30 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. மொத்தப் பணியும் முடிந்த பிறகு ஊழியர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றனர். இதனால், 1980-க்குப் பிறகு அந்த கிராமம் தனித்துவிடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Og2KjAa
No comments:
Post a Comment