காசாவின் வடக்குப் பகுதியில் உள்ள 1.1 மில்லியன் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படாவிட்டால் தரைவழித் தாக்குதலில் மோசமாக பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என ஹமாஸ் இயக்கத்துக்கு இஸ்ரேல் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கையை ஹமாஸ் நிராகரித்தது ஒருபுறம் இருக்க, ஐ.நா. மூலம் இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை ஐ.நா அமைப்பே கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், "இத்தகைய செயல் பேரழிவை ஏற்படுத்தும். பேரழிவு தரும் விளைவுகள் இல்லாமல் அத்தகைய இடம்பெயர்வு நடைபெறுவது சாத்தியமில்லை" என ஐ.நா தனது அதிருப்தியை பதிவு செய்தது.
“இஸ்ரேல் ராணுவம் விதித்துள்ள 24 மணி நேர கெடுவுக்குள் தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களை வெளியேற்றுவது என்பது இயலாத காரியம் என மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர் காரணமாக பலத்த காயமடைந்துள்ள பலருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அது அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சையாக இருந்து வருகிறது. அப்படிப்பட்டவர்களை வெளியேற்றுவது என்பது அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு இணையானது. அத்தகையவர்களை வெளியேற்ற சுகாதாரப் பணியாளர்களிடம் கேட்பது மிக மோசமான கொடுமை. லட்சக்கணக்கானோரை வெளியேறச் சொல்வது இயலாத காரியம். அது மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும்” என உலக சுகாதார நிறுவனமும் தனது பங்குக்கு வேதனையை வெளிப்படுத்த தவறவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/40szgaw
No comments:
Post a Comment