டெல் அவிவ்: இஸ்ரேல் - ஹமாஸ்களுக்கு இடையேயான போர் கடந்து 33 வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைத்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ்களை சுற்றிவைளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ்களின் பரந்த சுரங்கப்பாதைகளைக் கண்டுபிடித்து தாக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.
இஸ்ரேலில் உள்ள காசா பகுதியில் அக்.7-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய முன்னெப்போதும் நிகழ்ந்திராத தாக்குதலில் 1,400 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஹமாஸ்களை முற்றிலுமாக அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக பதில் தாக்குதல் நடத்தியது. காசா நகரின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இந்த பதில் தாக்குதலில் இதுவரை 10,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தரைவழியாகவும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், தனது படைகள் காசா நகரன் மையப்பகுதியை அடைந்து ஹமாஸ்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலின் தரைப்படைகள் ஹமாஸ்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் நீண்ட சுரங்கப்பாதை வலையமைப்பை தற்போது தாக்கத் தொங்கியுள்ளதாகவும், சுமார் நூறு கிலோமீட்டர் வரை நீண்டு செல்லும் சுரங்கப்பாதைகளை தகர்ப்பதற்காக இஸ்ரேஸ் ராணுவ பொறியாளர்கள் வெடிமருந்துக்களை பயன்படுத்தி வருவதாகவும் உயர் ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5pGJcZM
No comments:
Post a Comment