டெல் அவில்: காசாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், காசாவின் அல்-ஷிபா மருத்துமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் டாங்கர் வாகனங்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இஸ்ரேல் ராணுவம் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. சுகாதாரத் துறையின் நிலை குறித்து காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சில புள்ளிவிவரங்களை காணலாம். அதில், "35 மருத்துவமனைகளில் கிட்டதட்ட 18 மருத்துவமனைகள் சேவையில் இல்லை. 72 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 51 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. காசாவில் உள்ள சுகாதாரத் துறை மீது 270-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. 57 ஆம்புலன்ஸ்கள் சேதமடைந்துள்ளன; அவற்றில் 45 முற்றிலும் சேதமடைந்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/U8iCHmr
No comments:
Post a Comment