https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/02/large/1177251.jpgஅணுமின் நிலையங்கள் பட்டியல்: இந்தியா-பாக். பரஸ்பரம் பரிமாற்றம் - TAMIL EXPRESS NEWS

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/02/large/1177251.jpgஅணுமின் நிலையங்கள் பட்டியல்: இந்தியா-பாக். பரஸ்பரம் பரிமாற்றம்

Share This

புதுடெல்லி: இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள அணுமின் நிலையங்கள், வசதிகள் குறித்த பட்டியல் டெல்லி மற்றும் இஸ்லாமாபாதில் உள்ள தூதரகங்கள் வழியாக பரிமாறிக் கொள்ளப்பட்டன. அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பரிமாறிக் கொள்ளப்படும் 33-வது பட்டியல் இதுவாகும். முதல் பட்டியல் கடந்த1992-ம் ஆண்டு ஜனவரி 1-ம்தேதி பரிமாறிக் கொள்ளப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் டிசம்பர் 31, 1988-ல் கையொப்பமிடப்பட்டு, ஜனவரி 27,1991 முதல் நடைமுறைக்கு வந்தது. ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதியன்று இந்த பட்டியலை பகிர்ந்துகொள்ள வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FYwt1i8

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages