https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/09/xlarge/1181185.jpgஜப்பானில் 6.0 ரிக்டரில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை - TAMIL EXPRESS NEWS

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/09/xlarge/1181185.jpgஜப்பானில் 6.0 ரிக்டரில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

Share This

டோக்கியோ: ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் தாக்கம் 6.0 ஆகப் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. முன்னதாக கடந்த ஜனவரி 1, புத்தாண்டு தினத்தில் ஜப்பானில் 7.6 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கூடவே 120-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகின. இதில் 202 பேர் உயிரிழந்தனர். 565 பேர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தில் பல்வேறு கட்டுமானங்கள் சேதமடைந்தனர். 23 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். ஹொகரிகு பகுதி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடுமையானப் பனிப்பொழிவு நிலவுவதால் இதுநாள் வரை மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள இயலவில்லை. வீடுகளை இழந்த பலரும் நிவாரண முகாம்களிலேயே முடங்கியுள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம், குடிநீர் விநியோகம் ஆகியனவற்றை சீரமைக்க முடியவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜன.1 நிலநடுக்கம் மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளதாக அந்நாட்டு சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Qz3qvEr

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages