புதுடெல்லி: மார்ச் 15-ம் தேதிக்குள் மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கெடு விதித்துள்ளார்
கடந்த ஆண்டு செப்டம்பரில் மாலத்தீவு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் தேசியகாங்கிரஸ் தலைவர் முகமது முய்சுபுதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். சீன ஆதரவாளரான அவர் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மாலத்தீவில் 88 இந்திய ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் வெளியேற வேண்டும் என்று முகமது முய்சு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த சூழலில் மார்ச் 15-ம் தேதிக்குள் மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என்று அதிபர் முய்சு கெடு விதித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/s3TL9wU
No comments:
Post a Comment