இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஈரானில் 9 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. முன்னதாக, ஈரான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 2 சிறுமிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கொடுக்கப்பட்ட பதிலடியில் ஈரானில் 9 உயிர்கள் பறிபோயுள்ளன. இரு நாடுகளும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் காரணம் கூறி தாக்கி வருகின்றனர். இது இன்று முளைத்த புதிய பிரச்சினை இல்லை என்றாலும் ஏவுகணை, ட்ரோன் வீசி தாக்கிக் கொள்வது என்பது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.
ஆண்டுக்கு ஒரு போர்! - போ-ர் எப்போதும் ஒரு தேசத்தை மட்டுமோ, சம்பந்தப்பட்ட தரப்புகளை மட்டுமே பாதிப்பதாக அல்லாமல் சிற்றலை விளைவை ஏற்படுத்தும். ஆனால், மாறிவரும் உலக அரசியலில் போர் அதன் தாக்கத்தின் வீச்சை விஸ்தரித்துக் கொள்கிறது. அப்படித்தான் இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக மேற்கு ஆசியாவில் தொற்றிய பதற்றம் மெல்ல மெல்ல ஈரானை ஆக்கிரமித்துள்ளது. மேற்கு ஆசிய பதற்றத்தால் தனது உள்நாட்டு, வெளியுறவு பாதுகாப்பு சவால்கள் மீதான அழுத்தம் தர அண்டை நாடுகளைத் தாக்க வேண்டிய நிர்பந்தத்துக்குள் ஈரான் விழுந்திருக்கிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் கூட, பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய தாக்குதல் தற்காப்பு நடவடிக்கை என்று அடையாளப்படுத்தி இருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/knIUc0C
No comments:
Post a Comment