புதுடெல்லி: ஒரு காலத்தில் மாலத்தீவுகள் தமிழ்நாட்டின் சோழ மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த தீவுகள் பின்னர் சிங்களவர்களின் ஆட்சிக்கு மாறியது. கடந்த 1153-ல் மாலத்தீவில் முஸ்லிம் மதம் பரவியது. கடந்த 1558-ல் போர்ச்சுகல், 1654-ல் நெதர்லாந்தின் காலனி நாடாக இருந்த மாலத் தீவு கடந்த 1887-ல் பிரிட்டனின் காலனி நாடாக மாறியது.
கடந்த 1965-ம் ஆண்டில் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. கடந்த 1968-ம் ஆண்டில் சுல்தான் ஆட்சியில் இருந்து குடியரசு நாடாக மாறியது. அப்போது முதல் ஜனநாயக முறைப்படி அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் மாலத்தீவு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் தேசிய காங்கிரஸ் தலைவர் முகமது முய்சு புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவர் சீனாவின் ஆதரவாளர் ஆவார். கடந்த நவம்பரில் அவர் ஆட்சிப் பொறுப்பேற்றார். அப்போதுமுதல் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6y08q3U
No comments:
Post a Comment