டெல் அவிவ்: காசா போரில் குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் கொடுத்த விலை அதிகமானது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் போர் 3 மாதங்களைக் கடந்து நடந்துவரும் நிலையில் பிளின்கன் இஸ்ரேல் வந்துள்ளார். இந்தப் போர் ஆரம்பித்த பின்னர் அவர் நான்காவது முறையாக இஸ்ரேல் வந்துள்ளார். இஸ்ரேல் அரசுப் பிரதிநிதிகள் அதிகாரிகளுடன் அவர் போர் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் இந்தச் சந்திப்பு குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் சென்று சேர்வதை இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும். அதிலிருக்கும் தடைகளை இஸ்ரேல் கலைய வேண்டும். அதேவேளையில் அப்பாவி பொதுமக்களுக்கு மத்தியிலேயே ஹமாஸ் குழுவினரும் கலந்துள்ளதால் இஸ்ரேலுக்கு அது சவாலாக இருக்கிறது. நான் இஸ்ரேலியத் தலைவர்களுடனான சந்திப்பில் மனிதாபிமான அடிப்படையில் சென்றுசேர வேண்டிய உதவிகள் பற்றி பேசினேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Dznrlsd
No comments:
Post a Comment