https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/17/xlarge/1184582.jpg“கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” - ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை - TAMIL EXPRESS NEWS

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/17/xlarge/1184582.jpg“கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” - ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

Share This

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் பாலோசிஸ்தான் பகுதியில் இருவர் உயிரிழந்த நிலையில், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையானது வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் பாலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் உல் அதில் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை தாக்கியதாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்கியதாகத் தெரிவித்தது. ஸ்விட்சர்லாந்து நாட்டின் டேவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டில் ஈரான் வெளியுறவு அமைச்சரும், பாகிஸ்தானின் காபந்து பிரதமர் அன்வர் உல் ஹக் கக்காரும் சந்தித்துக் கொண்ட வேளையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசானது ஈரான் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர், மூன்று சிறுமிகள் காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளதோடு கடும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது எங்கள் வான்வெளியில் நடத்தப்பட்ட அத்துமீறல். இந்தத் தாக்குதல் அப்பாவிக் குழந்தைகள் இருவர் இறந்துள்ளனர். சிறுமிகள் காயமடைந்துள்ளனர். இது சிறிதும் ஏற்க முடியாதது. இதற்கு கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” என்று எச்சரித்துள்ளார். இருப்பினும் அந்த அறிக்கையில் தாக்குதல் நடைபெற்ற இடம் பற்றிய விவரமோ என்ன மாதிரியான தாக்குதல் என்பதைப் பற்றியோ விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VjbKWo1

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages