https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/08/large/1180542.jpgலட்சத்தீவு கடற்கரைக்கு சென்று வந்த பிறகு பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம்: மாலத்தீவின் 3 அமைச்சர்கள் நீக்கம் - TAMIL EXPRESS NEWS

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/08/large/1180542.jpgலட்சத்தீவு கடற்கரைக்கு சென்று வந்த பிறகு பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம்: மாலத்தீவின் 3 அமைச்சர்கள் நீக்கம்

Share This

மாலே: பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த மாலத்தீவின் 3 அமைச்சர்கள் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2, 3-ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அந்த பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

அதோடு அவர் வெளியிட்ட பதிவுகளில், “லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு பிரமிக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவெட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி. சாகச சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம். நான் ஸ்நோர்கெலிங் பொழுதுபோக்கில் ஈடுபட்டேன். கவச உடையில் நீருக்கடியில் மூழ்கியது புதிய அனுபவமாக இருந்தது" என்று தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/h1cFOuD

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages