https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/01/large/1147335.jpgகாசா அப்டேட் | ரஃபா எல்லை முதல்முறையாக திறப்பு; இஸ்ரேல் உடனான தூதரக உறவை துண்டித்தது பொலிவியா - TAMIL EXPRESS NEWS

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/01/large/1147335.jpgகாசா அப்டேட் | ரஃபா எல்லை முதல்முறையாக திறப்பு; இஸ்ரேல் உடனான தூதரக உறவை துண்டித்தது பொலிவியா

Share This

காசா: இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு ரஃபா எல்லை முதல்முறையாக திறக்கப்பட்டுள்ளது. இந்தப் போரில் காயமடைந்தவர்கள் எகிப்தில் சிகிச்சை பெறும்விதமாக ரஃபா எல்லை திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காசா மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரி, இஸ்ரேல் உடனான உறவை பொலிவியா அரசு துண்டித்துள்ளது.

காசா - எகிப்து எல்லையான ரஃபா கிராசிங் பார்டர், போரில் காயமடைந்தவர்கள் எகிப்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்விதமாக திறக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு ரஃபா எல்லை முதல் முறையாக திறக்கப்படுவது இப்போதே. அதன்படி, போரில் காயமடைந்த பாலஸ்தீனியர்கள் தவிர 500 வெளிநாட்டினர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்ட பாலஸ்தீனியர்களும் ரஃபா பார்டர் வழியாக எல்லையை கடந்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Q3jm9xa

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages